விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், சிவகாசி மாநகர திமுக சார்பில், திமுக அரசின் 2 ஆண்டுகள் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில், மாநகராட்சி மண்டல குழு தலைவர் குருசாமி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. செயலாளர் உதயசூரியன் பேசும்போது, தமிழ்நாட்டின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்று, 3வது ஆண்டு துவங்கியுள்ளது. இந்த 2 ஆண்டுகளில் திமுக அரசு எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது.
குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி, மேலும் பெண்கள் சுயமாக தொழில்கள் துவங்குவதற்காக புதிய கடன் வசதிகள், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக அந்நிய முதலீடுகள் ஈர்ப்பு, பெரிய நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு எளிதான அனுமதி முறைகள் என இந்த அரசு பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எல்லோருக்கும் எல்லாமும் மற்றும் சமூகநீதி என்ற திராவிட மாடல் இந்தியா முழுமைக்குமானது என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார். அதனை நாம் உறுதிபடுத்தும் வகையில், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை முற்றிலும் தோல்வியடைய செய்ய வேண்டும். திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகத்தின் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு இப்போதிருந்தே தேர்தல் பணிகளை துவங்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் திமுக கட்சி நிர்வாகிகள், மாமன்ற திமுக உறுப்பினர்கள் உட்பட திமுக கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி