திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 69வது பிறந்தநாள் விழா வேகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நாலூர் பகுதியில் ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார் தலைமையில் அப்பகுதியில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டு அங்கிருந்தவர்களுக்கு அன்னதானமும் வழங்கினர், அதனைத் தொடர்ந்து பொன்னேரி அடுத்த மேலபட்டறை கிராமத்தில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியின் துவக்கமாக கோவில்களில் சிறப்பு பூஜையும், அன்னதானமும், இனிப்புகளும் வழங்கப்பட்டது, முன்னதாக ஜெயலலிதா, எம்ஜிஆரின் திருவுருவப்படமும் நிறுவப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்ச்சிகளில் பொன்னுதுரை, வெற்றிவேல் ராமலிங்கம், கொண்டக்கரை அமிர்தலிங்கம், வழக்கறிஞர் மாரி, உழைத்த திரளான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு