தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து,
சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றிய முதமலைச்சர் மு.க.ஸ்டாலின் ஐஏஎஸ் அதிகாரிகளையும் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணன் நியமனம்
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக மாற்றம் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக டாக்டர் பி. செந்தில்குமார் நியமனம்
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையராக மைதிலி ராஜேந்திரன் நியமனம்
முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்
நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம்
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக டி.ஜெகன்நாதன் நியமனம்பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கணேஷ் நியமனம்ஊரக வளர்ச்சி செயலாளர் பி.அமுதா உள்துறை செயலாளராக மாற்றம்உள்துறை செயலாளராக இருந்துவந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக மாற்றம்போக்குவரத்துத்துறை செயலாளராக இருந்த டாக்டர் கே.கோபால் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.பொதுப்பணித்துறை செயலாளர் டாக்டர் மணிவாசன், சுற்றுலா இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக நியமனம்பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருந்த கே.நந்தகுமார் மனிதவள மேலாண்மைத்துறை செயலாளராக நியமனம்நந்தகுமார் வகித்துவந்த பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.பொதுப்பணித்துறை செயலாளராக டாக்டர் சந்திரமோகன் நியமனம்
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி