சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மு.வி. அரசு உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கார்த்திக் சிதம்பரம் திறந்து வைத்தார். உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ்.மாங்குடி உள்ளார். உடன் நகர மன்ற உறுப்பினர்கள் மரியாதைக்குரிய மனோகரன் அவர்கள் மற்றும் மரியாதைக்குரிய சித்திக் அவர்கள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி