சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் ஆட்சித் தலைவராக (22.05.2023) பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி.ஆஷா அஜீத்,இ.ஆ.ப.,அவர்கள், கேரளா மாநிலம்,கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தேர்ச்சி பெற்று, 2016-2017-ஆம் ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) -ஆக பணிபுரிந்தார். 2017-2019-ஆம் ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை சார் ஆட்சியராக -ஆக பணிபுரிந்தார். 2019-ஆம் ஆண்டில் சென்னை தலைமைச் செயலகத்தில் துணை செயலாளர் (பொது) -ஆக பணிபுரிந்தார். 2022-ஆம் ஆண்டில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்தார். தற்போது, நடப்பு மாதம் மே – 19 வரை சென்னையில், தொழில் வழிகாட்டி நிறுவன செயல் இயக்குநராக (வழிகாட்டுதல்) பணிபுரிந்தவர் ஆவார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி