சிவகங்கை : காரைக்குடியில், சிவகங்கை மாவட்டக் கழகச் செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் மற்றும் தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது, வருகிற 25ஆம் தேதி கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வருகை, உறுப்பினர் சேர்க்கை, கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி