மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சரந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 வது சதய விழாவையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு கிராம மக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலூர் எம்.எல்.ஏ பெரியபுள்ளான், திமுக அவை தலைவர் பாலசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர் மனோகர வேல்பாண்டியன், பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் பவானி தனசேகரன், ஒப்பந்தகாரர் பெரிச்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள், கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வாணவேடிக்கை முழங்க கிராம மக்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து சிலைக்கு ஊற்றி பாலபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராம மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் வருகை தந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி