சென்னை : சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் உயர்திரு. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மகன் அரவிந்தன் யு.பி.எஸ்.சி, சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியா ரேங்கில் 361 வது இடம் பிடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளார். உயர்திரு. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், அவர்கள் பணி செய்த மாவட்டத்தில் ஆட்சியாளராக இருக்கும்போது மக்கள் பணியே மகேஷின் பணி என்ற அடிப்படையில் மக்களுக்கு தேவையான திட்டங்களை மக்களிடத்தில் சேர்க்கும் நல்ல எண்ணத்தோடு பணி செய்துமைக்காக ஜனாதிபதி,முதலமைச்சர், ஆளுநர்கள்,அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களும் ஆகிய அனைவரிடமிருந்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றவர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான I.A.S, I.P.S, I.F.S, ஆகிய பதவிகளுக்கு நடத்தப்படும் UPSC சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இறுதி முடிவுகள் நேற்று வெளியாகின. நாடு முழுவதும் 180 ஐ.ஏ.எஸ், 200 ஐ.பி.எஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி டி.ஜே.சத்ரியாக இந்திய அளவில் 169வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசுச் செயலாளர் ஜெகந்நாதனின் மகள் ஆவார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி