திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் நந்தம்பாக்கம் ஊராட்சிக் அடங்கிய விநாயகர் கோவில் தெருவில் இந்தியன் ஆயில் லிமிட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம் 19.44 ஆயிரம் ரூபாய். மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நாகராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் மற்றும் துணைத் தலைவர் கலாவதி மனோகரன் அனைவரையும் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தி.மு.க, மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே, ரமேஷ்ராஜ் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி ஆகியோர் கலந்து கொண்டு புதிய சிமெண்ட் சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார் சந்திரசேகர் தி.மு.க நிர்வாகிகள் மீ.வி. கோதண்டம் முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் பா.து.தமிழரசன் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தி.மு.க, நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு