திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் நகரங்களுக்கான தூய்மை பணி வாரத்தை முன்னிட்டு நம் குப்பை நம் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் பொதுமக்கள் பங்கேற்று தூய்மைபடுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு முன்னிலை வகித்தார்.முன்னதாக ஓடிசா இரயில் நிலைய விபத்தில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் பொதுமக்கள் பங்கேற்புடன் தூய்மை பணிகள் நடைபெற்றது.மீஞ்சூர்.வரதராஜ பெருமாள் கோவில் வளாகம் தூய்மைபடுத்தப்பட்டது.இதில் வார்டு கவுன்சிலரெ அபுபக்கர் சுகாதார மேற்பார்வையாளர் கோபி மகளிர் சுய உதவிக்குழுக்கள் வணிகர் சங்க பிரிதிநிதிகள் குடியிறுப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு