திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நரிக்குறவ பெண் ஐஸ்வர்யா,(22) மூன்று மாத கர்ப்பிணியான இவர் இரும்பு கழிவுகளை சேகரிப்பதற்காக, பட்டமந்திரி பகுதிக்கு சென்றுவிட்டு, தமது கணவர் அஜித், (25) உடன், டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக்கில் மீஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த சாம்பல் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று, அஜித் ஓட்டிசென்ற பைக் மீது மோதியது. இதில், ஐஸ்வர்யா லாரியின் சக்கரத்தில் சிக்கி, வயிற்றில் இருந்த மூன்றுமாத குழந்தையுடன் உடல் நசுங்கி துடிதுடித்து கணவன் கண் முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அஜித் காலில் பலத்த காயம் ஏற்பட்டு துடித்தார். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அஜித்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரில் சென்று அந்தக் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து இந்த வழக்கை நானே முன் நின்று நடத்தி முழு நிவாரண உதவியை பெற்று தருவதாக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் உறுதியளித்தார் அருகில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் கா.சு. ஜெகதீசன் கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா துரைராஜ் மீஞ்சூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் அபூபக்கர், குரு சாலமன், வில்சன்,பொன்.கு.லோகநாதன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு