திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஓராண்டு நிறைவு நாளை முன்னிட்டு ஏழாவது வார்டில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரத் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது முகாமிற்கு வருகை புரிந்த அனைவரையும் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு வரவேற்பு அளித்தார். ஏழாவது வார்டு கவுன்சிலர் ஜோதிலட்சுமி மோகன் முன்னிலை வகித்தார். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத்தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் தலைமை தாங்கி முகாமை கொடியசைத்து துவக்கி வைத்தனர். பின்பு பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில் உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து ஏழாவது வார்டு முழுவதும் கடைகள் வீடுகள் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சென்று பிளாஸ்டிக் பையை பயன்படுத்த வேண்டாம் என துண்டு பிரச்சாரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .கடைகள் முன்பாக சுவர் விளம்பரம் ஒட்டி கடைகளுக்கு வருகை தரும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பையை பயன்படுத்த வேண்டாம்மென தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி தன்ராஜ், நக்கீரன், அபூபக்கர், திமுக முன்னாள் பேரூர் கழக செயலாளர் நா.மோகன்ராஜ் மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு கௌரவ தலைவர் ஏ.கே. சுரேஷ், தலைவர் ஏ.சி. ராஜேந்திரன் , செயலாளர் வழக்கறிஞர் முகமது அலி, துணைத் தலைவர் பாபு என்ற அஜுஸ், மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் மகளிர் சுய உதவி பெண்கள் குடியிருப்போர் நல சங்கம் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு