சிவகங்கை : சிவகங்கை இந்திராநகர் 26,27வது வார்டு பகுதியில் புதிதாக போடபட்ட தார்சாலைகளின் தரம் குறித்த ஆய்வை நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் பிஏ அவர்கள் மேற்கொன்டார். ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் பாண்டிஸ்வரி மற்றும் SO, SI ஆகியோர் உடனிருந்தனர். இவ்ஆய்வின் போது வார்டுகளில் மேம்படுத்தபடவுள்ள திட்டங்கள்,சுகாதார நிலைகள்,பொதுமக்களின் பிரச்சனைகள் கேட்டறியபட்டு சரிசெய்வது குறித்த கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 26வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மதியழகன்,அயுப்கான்,வட்ட செயளாளர்கள் RD.சேகர்,ராஜா மற்றும் வட்ட பிரதிநிதி சேது,இளைஞர் அணி து.அமைப்பாளர் மகேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திகேயன், சேசா,மோகன்ராம் மற்றும் கழக உடன்பிறப்புகள் உடனிருந்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி