மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு பேரூர் இளைஞரணி சார்பில் திராவிட முன்னேற்ற கழக இராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூர் இளைஞரணி செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். அவை தலைவர் பாலசுப்பிரமணியன்,ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், அலங்காநல்லூர் சேர்மன் ரேணுகா ஈஸ்வரி, பேரூர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகை மருதுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சாளர் சாதுராஜன் பேசுகையில் தி.மு.க, ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கண்டது தி.மு.க ஆட்சி தான். ஜல்லிக்கட்டுக்கென பிரம்மாண்ட மைதானம் கட்டப்பட்டு வருகிறது, கிராமப் பகுதிகளில் சாலைகள் அனைத்தும் விரிவு படுத்தப்பட்டு புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி