விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், படித்துவரும் பள்ளிமாணவ- மாணவிகள் தங்களுக்கு தேவையான சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று போன்ற பல்வேறு வகையான சான்றுகளை பதிவு செய்வதற்கு இ-சேவை மையங்களுக்கு சென்று வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் , காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் இ-சேவை மையம் தொடங்க வேண்டும் என்று, அமைச்சர் தங்கம் தென்னரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, காரியாபட்டியில் உள்ள திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் புதிதாக இ-சேவை மையத்தையும், கள்ளிக்குடி சாலையில் சமுத்திரம் அறக்கட்டளை சார்பாக அமைக்கப்பட்ட இ.சேவை மையத்தையும் அமைச்சர் தங்கம் தென்னரசு
தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சித்தலைவர் செந்தில், ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம் , மாவட்டக்
கவுன்சி லர் தங்க தமிழ்வாணன், மாவட்ட விவசாய தொழிலா ளர் அணி தலைவர் தங்க பாண்டியன், துணைத்தலை வர் கல்யாணி, காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர் செ வராஜ் சங்கரேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி