மதுரை : சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியில் காடுபட்டி புதுப்பட்டி வடகாடுபட்டிஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டுமென அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர். இதன் பேரில் காடுபட்டி கிராமத்தில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர கோரி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் அரசுக்கு கோரிக்கை வைத்தார். இதன் பேரில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட்டு இதற்கான திறப்பு விழா பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் காணொளி மூலமாக திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு காடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார் மருத்துவர் அருண்கோபி முன்னிலை வகித்தார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் வரவேற்றார் கச்சகட்டி வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், பிரபாகரன், ராமகிருஷ்ணன், சதீஷ், கிராம செவிலியர் உஷா செல்வமணி, மக்களை தேடி மருத்துவம் பணியாளர் மலர் விழி, மற்றும் பணியாளர்கள் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பல ர் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் ஒய்யனன் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி