திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள அரசு உதவி தொடக்கப்பள்ளி நூறாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்து அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. என்.டி.சி.எல் நிறுவன சமூக வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.21.39000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்தினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மீஞ்சூர் ஒன்றியக் குழுப் பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி,மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ்,துணைத்தலைவர் அலெக்சாண்டர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுப்பிரமணி, ஷேக் அகமது,பள்ளி தலைமை ஆசிரியை ரேணுகா உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். அதன் பின் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு ஆய்வு கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தென்கணல் இசைமொழி, பார்வையாளர் பழவை முத்து ,ஆகியோர் மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் பள்ளி வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்து பேசினர் இதில் வார்த்து உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு