மதுரை : தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் (2022- 23), ன் கீழ் ரூ.1கோடியே 6லட்சம் மதிப்பீட்டில் பண்னைகுடி – மேட்டூர் தார் சாலைகள், மற்றும் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் சால்வார்பட்டி – முடுவார்பட்டி தார் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் தன்ராஜ், யூனியன் ஆணையாளர் வள்ளி, ஒன்றிய கவுன்சிலர் தங்கதுரை, ஊராட்சி மன்றத்தலைவர் சத்யா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் துரைக்கண்ணு, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மலர்கொடி தமிழரசன், பாலமுருகன், காயத்ரி இதயசந்திரன், ஒன்றியக் கவுன்சிலர் தண்டலை சரவணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனுஷ்கோடி, பிச்சை, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, மாணவரணி அமைப்பாளர்கள் பிரதாப், யோகேஷ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராகுல், வடுகபட்டி துணைத் தலைவர் அன்பு முத்து, மாலைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சக்திமுருகன், மேட்டூர் செல்வம், இளைஞரணி சின்னஊர்சேரி ஆனந்த், மற்றும் ஒப்பந்தக்காரர்கள், நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி