இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கை (01.07.2023) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (04.07.2023) முதல் ஒருமாத காலத்திற்கு
பொறியாளர்களால் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தரத்தன்மை குறித்து பரிசோதிக்கப்படுகிறது. இந்நிகழ்வின்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பராமரிப்பு பணிகளை CCTV கேமரா மூலம் கண்காணிப்பதுடன் இப்பணிகள் முடியும் வரை முழுமையாக பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் இருந்து வருவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராஜலு அவர்கள், சமூக பாதுகாப்பு திட்டம் (தனித்துணை ஆட்சியர்) திருமதி.மாரிசெல்வி அவர்கள், வட்டாட்சியர் (தேர்தல்) திரு.ரவி அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல்
கட்சி பிரமுகர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி