மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சின்ன வடகரையில் உள்ள ஊரணியில் , நகராட்சி பகுதியிலிருந்து வரக்கூடிய கழிவுநீரை அத்து மீறி அங்குள்ள ஊரணியில் கலக்கச் செய்வதால் , ஊரணியில் இருந்து கிராம மக்களுக்கு செல்லக்கூடிய தண்ணீர் துர்நாற்றத்துடனும், நோய் தொற்று பரவும் நிலைக்கு தண்ணீர் கலங்கலாக வருவதால் , கிராம் மக்கள்அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் மற்றும் நகராட்சி அதிகாரியிடம் முறையிட்டனர், அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, ஒரு மாத காலமாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், அப்பகுதியில் உள்ள 700க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பெரும் பீதியில் உள்ளனர். இதனால் ,மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து சப்ளை செய்யக்கூடிய தண்ணீர் கலங்கலாகவும், துர்நாற்றம் வீசி வருவதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். போர்க்கால நடவடிக்கையில் நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சின்ன வடகரை ஊரணியில் கலப்பதை தடுத்து, இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வடகரை கிராம மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி