சிவகங்கை : சிவகங்கை மாவட்ட கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில், செட்டிநாடு ஊராட்சியில் உள்ள கால்நடைப் பண்ணையில் 150 ஏக்கர் பரப்பளவில், கால்நடைகளுக்கு தேவையான பராமரிக்கப்பட்டு வரும் கால்நடை தீவனம் மரங்கள் மற்றும் பல்வேறு வகையான 600 மாடுகள் வளர்க்கப்படும் கால்நடை கொட்டகைகள், கன்றுக் கொட்டகைகள், பால் கறவைக்கூடம், பல்வேறு வகையான 4,100 ஆடுகள் வளர்க்கப்படும் ஆட்டுக்கொட்டகைகள், மற்றும் சுமார் அசில் நாட்டுக்கோழி 1.258 குஞ்சுகள் வளர்க்கப்படும் கோழிக் கொட்டகைகள் ஆகியவைகள் தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.ஆஷா அஜித்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த ஆய்வின் போது 2021-22 ஆண்டு செட்டிநாடு மானட்ட கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணை உருவாக்குதல். தீவன ஆலை அமைத்தல் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்தல் திட்டத்தின்கீழ் 13.81 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு. இப்பண்ணையின் கோழிகள் பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகின்ற 1258 அசில் இன கோழிகளை, மேலும் பெருக்குவதற்கான உரிய அறிவுரைகளை வழங்கினார்.
இப்பண்ணையில் ஆடுகள் பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆடுகளில் 98 எண்ணிக்கை கொண்ட இராமநாதபுரம் வெள்ளை இன செம்மறி ஆடுகள் மற்றும் 259 எண்ணிக்கை கொண்ட தலைச்சேரி, ஜமுனாபாரி இன் வெள்ளாடுகள், ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கிடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதேபோன்று, மாட்டினப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் மாடுகளில் 425 தார்பார்கர், சாகிவால் இன மாடுகளின் பால் உற்பத்தியை மேலும் பெருக்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கும் அறிவுறுத்தினார். குறிப்பாக. இப்பண்ணையில் விவசாயப் பிரிவில் 40 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகின்ற கோ-4 தீவனப்புல், 150 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரத்தீவனப்புல், 15 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகின்ற நாற்றுச்சோனம் ஆகிவற்றை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கிடவும், இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஊறுகாய்ப்புல் தீவனக் கட்டுக்கள் அனைத்து கருவிகளையும் செயல்படும் நிலையில் பராமரித்து, உற்பத்தியை மேலும் பெருக்கிடவும் உரிய அறிவுரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜீத்.இ.ஆ.ப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு வழங்கினார். இந்த ஆய்வின் போது. கால்நடை பராமரிப்புத்துறையின் துணை இய (கூபொ) மரு.பாலசுப்பிரமணியன், கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.நட் மரூ.பிரபாகரன், விவசாய மேலாளர் திரு.இதயத்துல்லா உட்பட சம்பந்தப்பட்ட சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி