சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ, இராம.சிவராமனின் 16ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் பங்கேற்று அவருடைய திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல் திருப்பத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் கோகிலா ராணி நாராயணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முகமது கான், நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் கே.பி.எஸ், பழனியப்பன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகரக் கழக கிளைக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றனர். உடன் காரைக்குடி நகர்மன்ற உறுப்பினர்கள் சித்திக் ,சோனா கண்ணன் மற்றும் காரைக்குடி நகர வார்டு செயலாளர்கள் முகமது கனி மற்றும் கழக உடன் பிறப்புகள் மற்றும் தொண்டர்கள் உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி