மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக பிரபல தொழிலதிபரும் கவுன்சிலருமான சோழவந்தானின் கல்வித் தந்தையுமான, டாக்டர் மருது பாண்டியன் கடந்த ஆண்டு பொறுப்பேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கியும், சிறப்பான முறையில் கல்வி மற்றும் மருத்துவ முகாம்கள் மூலம், சமூக சேவைகள் செய்து வந்த நிலையில் அரிமா சங்க நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக அரிமா சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புதிதாக பொறுப்பேற்ற மருது பாண்டியனை, அரிமா சங்க நிர்வாகிகளும் சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட்ட பலர் அவரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருது பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சோழவந்தான் நகரின் அரிமா சங்க தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்றது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. சென்ற ஆண்டின் சோழவந்தான் அரிமா சங்கத்தின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு தொடர்ந்து, இரண்டாவது முறையாக தலைவர் பொறுப்பை வழங்கியுள்ள அரிமா சங்க நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவியானது எனது சமூகப் பணிகளை செய்வதற்கு என்னை மேலும் ஊக்கப்படுத்துவ வகையில் அமையும் என்றும், எனது இந்த பதவியை ஏழை எளியவர்களின் வாழ்வு மேம்பாட்டுக்காகவும் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளிப்பதற்கும் மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதற்கும் பயன்படுத்த போவதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி அலங்காநல்லூர் திருமங்கலம் திருநகர் போன்ற பகுதிகளில் இருந்து அரிமா சங்க நிர்வாகிகள், எம் வி எம் பள்ளி நிர்வாகிகள், மணி முத்தையா மற்றும் வள்ளி மயில் ஆகியோர் வாடிப்பட்டி தாலுகா தங்க நகைஅடகு கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் எம். வி.எம். குழுமத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி