சிவகங்கை : காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டு கட்ட கலந்தாய்வு முடிந்து பிட்டர், டரனர், மெஷினிஸ்ட், வயர்மேன், அட்வான்ஸ்ட் சி.என்.சி மெஷினிங் டெக்னீசியன் (Advanced CNC Maching Technician), பேஸிக் டிசைனர் அன்டு விரகவல் வெரிபையர் (மெக்கானிக்கல்) (Basic Designer and Virtual Verifier (Mechanical) போன்ற இரண்டு வருட தொழிற்பிரிவுகளுக்கும், வெல்டர், கோபா. மேனுபேக்சரிங் புராசஸ் கண்ட்ரோல் அன்டு ஆட்டோமேஷன் (Manufacturing Process Control and Automation), இங்டஸ்டிரியல் ரோபட்டிக்ஸ் அண்டு டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் (Industrial Robotics and Digital Manufacturing Technician) போன்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும் ஒரு சில இடங்களே காலியாக உள்ளது. எனவே மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் சேர விருப்பம் உள்ள 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / 12 ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது முதல் காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக வந்து சேர்க்கையில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இங்கு சேர்ந்து பயிற்சி பெறுகின்ற மாணனர்களுக்கு பேருந்து கட்டண சலுகை விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடைகள், விலையில்லா காலணி, வரைபடக் கருவிகள், நோட்டுப் புத்தகங்கள், போன்றவை வழங்கப்படும், மேலும், ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750/- உதவித் தொகையும், பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1750/- உதவித் தொகையும் வழங்கப்படும் பயிற்சி முடித்த மானவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். எவனே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி காரைக்குடி பகுதியில் உள்ள மாணவர்கள் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 9499055784 1 9499055785 என்ற அலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். சிவகங்கை ஆட்சித்தலைவர் திருமதி. ஆஷா அஜித்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி