விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும், முன்னாள் முதல்வர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் உருவச்சிலைக்கு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு, முன்னாள் முதல்வர் காமராஜரின் உருவச்சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி