விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக நிதி ஆயோக் சிறப்பு நிதி திட்டத்தில் காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்-2 எ. நெடுங்குளம், வார்டு எண்3, காமராஜர் காலனி, ஜெகஜீவன் ராம் தெரு, வார்டு எண்-8, அச்சம்பட்டி வார்டு எண்-14 கரிசகுளம்ஆகிய இடங்களில் 1 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 5 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடங்கள் திறப்பு விழாவும், அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, பேரூராட்சி சேர்மன் செந்தில், தலைமை வகித்தார் . மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக நிதி, மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, புதிய அங்கன்வாடி கட்டிடங்களை திறந்துவைத்தார். மேலும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 33 பயனாளிகளுக்கு பணி ஆணையினையும் வழங்கினார். நிகழ்ச்சியில், காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், வட்டாட்சியர் சுப்பிரமணியம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி