விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே , புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை, அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். காரியாபட்டியிலிருந்து புல்லூர் வழியாக திருமங்கலம் செல்ல கூடுதல் பேருந்து துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய பஸ் வழிதடத்தை துவங்கிவைத்தார். ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம், பேரூராட்சித் தலைவர் செந்தில், மாவட்டக்கவுன்சிலர் தங்கதமிழ்வாணன் ஊராட்சி மன்றத் தலைவர் சிவசக்தி, ஒன்றிய துணைச் செயலாளர் உப்பிலிக்குண்டு குருசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி