விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ். பி. எம். டிரஸ்ட் மற்றும் மதுரை அபிமன் கிட்னி சென்டர் சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி தலைமை வகித்தார்.அபிமன் கிட்னி சென்டர் நிறுவனர் டாக்டர்.ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். பேரூராட்சித் தலைவர் செந்தில் முகாமினை, தொடங்கி வைத்தார். முகாமில், 100 க்கு மேற்பட்ட நபர்களுக்கு சிறுநீரக சம்பந்தமான நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில், பேரூராட்சி பேரூராட்சி துணைத் தலைவர் ரூபி, கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், தீபா, சரஸ்வதி ஜனசக்தி சிவக்குமார் இன்பம் பவுண்டேஷன் விஜயகுமார் கிரீன் பவுண்டேஷன் பொன்ராம் சமூக ஆர்வலர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி