மதுரை : மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் வாடிப்பட்டி சின்னத்தம்பி ரெட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பாக, சின்னத்தம்பி ரெட்டியார் நினைவு தினத்தையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த முகாமிற்கு, அறக்கட்டளை தலைவர் காந்தி தலைமை தாங்கினார். செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் முகாமை தொடங்கி வைத்தார்.
காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் கராத்தே சிவா முன்னிலை வகித்தார். காக்கும் கரங்கள் மன்றச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். இந்த முகாமில், கிருஷ்ணன் கோயில், கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் ரூபேஸ்
தலைமையில், செவிலியர்கள் முத்துலட்சுமி, சங்கரேஸ்வரி, ஜெயராணி, ஜெயகர் ஆகியோர் 180 பேருக்கு கண் பரி சோதனை செய்தனர். அதில், 80 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், அறக்கட்டளை பொருளாளர் சக்தி வேல் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி