இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆய்வுக்கூட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் மண்டல காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.சினேகா பிரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இராமநாதபுரம் மண்டல மேலாளர், மாவட்ட கூட்டுறவுதுறை இணை பதிவாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவவர்கள், குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை துணை காவல் கண்களணிப்பாளர் மற்றும் கூட்டுறவுதுறை அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் கலந்து கொண்டு அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, நேரடி நெல் கொள்முதல் நிலையம், விவசாயிகள் அல்லாத இடைத்தரகர்களிடம் நெல் கொள்முதல் செய்யகூடாது, நெல் கொள்முதல் நிலையத்தில் அதிக இருப்பு (STOCK) வைக்ககூடாது, விவசாயிகளிடம் முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யவேண்டும், டோக்கன்களில் லாரி எடை ஒப்பந்ததாரர் பெயர், திருத்தம் இல்லாமல் தெளிவாக எழுத வேண்டும், லோடுமேன்கள் ஒப்பந்ததாரர்கள் விவசாயிகளிடம் நேரடியாக கூலி அதிகம் கேட்டு இடையூறு செய்யகூடாது, பில் கிளார்க், கொள்முதல் அலுவலர்கள் நெல் கொள்முதல் செய்யும் போது விவசாயிகளிடம் வாக்குவாதம் செய்வது, கையூட்டு பெறுவது வாக்குவாதம் மற்றும் முறைகேட்டில் ஈடுபடக்கூடாது, நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள பதிவேடுகள் தவறாமல் பராமரிக்கப்படவேண்டும், குறிப்பிட்ட இடத்தில் ஓழுங்காக அடுக்கி நெல்லினை பராமரிக்க தவறாமல் தேவையற்ற நபர்களை கொள்முதல் நிலையத்தில் அனுமதிக்ககூடாது, நெல் கொள்முதல் அதிகாரி உரிய முறையில் தகுதியான நல்ல நெல் கொள்முதல் செய்வதை உறுதிசெய்து தேவையற்ற பிரச்சனை ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும், நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு வழங்கும் விலைப்பட்டியல், புகார் தெரிவிக்கும் தொலைபேசி எண்கள் அடங்கிய பதாகைகளை கட்டாயம் வைக்க வேண்டும்.
அரிசி ஆலை (Hulling Mill), உரிமம் பெற்ற லாரிகளில் மட்டும் வரக்கூடிய நெல்லினை அனுமதிக்கவேண்டும், நெல் வரவு செலவு பதிவேடுகளில் உள்ள படி மட்டுமே ஆலைக்குள் நெல் இருக்க வேண்டும், அரிசி அரைத்து முடித்தவுடன் அரசு விதிகளின் படி பேக்கிங் செய்ய வேண்டும். உரிய நேரத்தில் அரைத்து அதிக சேமிப்பு வைக்காமல் குடோனுக்கு அனுப்பி வைக்க வேண்டும், தனியார் வாகனங்கள் மற்றும் பிற வியாபாரிகளிடமிருந்து எக்காரணம் கொண்டு அரிசி மற்றும் நெல் கொள்முதல் செய்யக்கூடாது, முறைகேட்டில் ஈடுபடும் அரிசி ஆலை உரிமம் ரத்து செய்ய ஆவண செய்யப்படும். பொது விநியோகத்திட்ட ரேசன் கடை- அரசால் நிர்ணயிக்கப்பட்ட விற்பனையாளரை தவிர பிற நபர்கள் ரேசன் பொருட்கள் வழங்குதல் கூடாது. கடையில் வழங்கப்படும் பொருட்களின் எடை சரியான அளவில் இருக்க வேண்டும், பொதுமக்களிடம் இருந்து காவல்துறை மற்றும் பிறதுறைகளுக்கு, புகார் செல்லாத வகையில் பணிபுரிய வேண்டும், ரேசன் கடையில் ஊழியர்கள் பொது விநியோகத்திட்ட அரிசிகளை கள்ளசந்தையில் விற்கும் முறைகேட்டில் ஈடுபடக்கூடாது, விலைப்பட்டியல், பொருட்கள் இருப்பு பட்டியல், புகார் தெரிவிக்கும் தொலைபேசி எண்கள் அடங்கிய பதாகைகளை கட்டாயம் கடையின் வெளியே வைக்க வேண்டும், ரேசன் கடை ஊழியர்கள் பொது மக்களுக்கு வழங்ககூடிய ரேசன் பொருட்கள் வாங்கியதாக வரும் குருஞ்செய்தி (SMS) அனுப்பும் முறைகேட்டில் ஈடுபடக்கூடாது என தெரிவித்தார், இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.க.நாராயணன் அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் திரு.ஜோதிபாசு அவர்கள், மாவட்ட கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் திரு.S.முத்துகுமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி