விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்று வருவதை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பெரியவள்ளிக்குளம், குல்லூர்சந்தை, பாலவநத்தம், மலப்பட்டி, விருதுநகர் வட்டம் அப்பைய நாயக்கன்பட்டி, சாத்தூர் வட்டம் நல்லமநாயக்கன்பட்டி, குண்டலகுத்தூர், கே.சொக்கலிங்காபுரம், சிறுகுளம், நத்தத்துப்பட்டி, வெங்கடாசலபுரம் ஆகிய இடங்களில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், தலைமையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளையும், முகாம்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் நியாய விலைக் கடைப் பணியாளர் மூலம் ஒவ்வொரு நியாயவிலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வழங்கப்பட்டு, விண்ணப்பப் பதிவு முகாம்கள் முகாம் 24.07.2023 முதல் 04.08.2023 வரையும், இரண்டாம் கட்ட முகாம் (05.08.2023) முதல் (16.08.2023) வரை இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. அதன்படி, முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் (24.07.2023) முதல் நடைபெற்று வருகிறது. விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாயவிலைக் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறுகிறது. அதன்படி, அருப்புக்கோட்டை வட்டம், பெரியவள்ளிக்குளம், குல்லூர்சந்தை, பாலவநத்தம், மலப்பட்டி, விருதுநகர் வட்டம் அப்பையநாயக்கன்பட்டி, சாத்தூர் வட்டம் நல்லமநாயக்கன்பட்டி, குண்டலகுத்தூர், கே.சொக்கலிங்காபுரம், சிறுகுளம், நத்தத்துப்பட்டி, வெங்கடாசலபுரம் ஆகிய இடங்களில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்று வருவதை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், பதிவு செய்யும் அலுவலர்களிடம் விண்ணப்பங்களை துல்லியமாகவும், விரைவாகவும் பதிவு செய்ய அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி