மதுரை : திருமங்கலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளியில், 780 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பி .கே .என், தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், நகராட்சித்தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்துகொண்டு, தமிழ்நாடு பள்ளியில் பயிலும் 260 மாணவிகளுக்கு 260 அரசின் விலையில்லா மிதிவண்டிகளும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 418 மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளும் வழங்கினார். இவ்விழாவில் , திருமங்கலம் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்டு தோறும் பள்ளியில் பிளஸ்-2, பிளஸ்-1 படிக்கும் மாணவிகளுக்கு, அரசு சார்பில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை, தமிழக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகிகளை வைத்து வழங்கி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி