மதுரை : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த பல மாதங்களாக நடந்து வரும் கொடுமையான இனகலவரத்தை கண்டித்தும், அங்கு மனித மாண்பு காத்திடவும், அமைதியை நிலை நாட்டிட வலியுறுத்தியும், மதவாத சக்திகள் ஒடுக்கப்படவும், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மணிப்பூர் BJP ஆட்சியை கலைத்திட வலியுறுத்தியும் மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் ஞாயிறு காலை திருப்பலி முடிந்ததும் ஆரப்பாளையம் – அரசரடி A.A ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை சின்னதுரை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான கிறிஸ்தவர்களும், மேலும் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டியும், மதவாத அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. ஆண்டனி வினோத்