மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நகர் அரிமாசங்கம் சார்பாக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் ஏழை,எளியோருக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா வாடிப்பட்டி நீதிமன்றம் அருகில் நடந்தது. இந்த விழாவிற்கு, முன்னாள் மாவட்டஆளுநர் எஸ்.எஸ்.பாரி
பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் மணிகண்டன், முதல்துணைஆளுநர்டாக்டர் சசிக்குமார், மண்டலத்
தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் பாலாஜி வரவேற்றார். புதியநிர்வாகிகளாக, தலைவராக ராமசந்திரன், செயலாளராக பாலசுந்தரம், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.
இந்தவிழாவில், ஏழை எளியோருக்கு இலவச ஆடைகள், அதிக மதிப்பெண்பெற்ற பள்ளிமாணவ-மாணவிகளுக்கு விருதுகள், தீயணைப்புத் துறைக்கு பாதுகாப்பு உபகரணங்கள், அங்கன்வாடி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இல்லத்திற்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்தவிழாவில், நிர்வாகிகள் சிவக்குமார், பாபநாசம், பொன்னையா, குருசாமி ,காந்திராஜன், சிவசங்கரன், சங்கு, பாபு சரவணன், சோழவந்தான் நகரத்தலைவர் எம். மருது பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி