மதுரை : மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே, பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகரில், ஏழை எளிய மாணவிகளுக்கு மீனாட்சி மில் ஜி.எச்.சி.எல் அறக்கட்டளை மற்றும் பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி இணைந்து இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பிற்கு, பரவை பேரூராட்சி த் தலைவர்
கலாமீனா ராஜா தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னாள் பேரூராட்சித் தலைவர் பரவை சி.ராஜா, கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் வரவேற்றார். அறக்கட்டளை சமூக பொறுப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் கணினி பயிற்சி பயன்பாடு பற்றி விளக்கி பேசினார். இதில், பெட்கிராட் பொருளாளர் எஸ். கிருஷ்ணவேணி, பயிற்சியாளர்கள் கண்ணன், கீர்த்திராஜ், ஷிபா உள்பட 35 வளர் இளம் பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில், துணைத்தலைவர் மார்ட்டின் லூதர்கிங் நன்றியுரை கூறினர். முன்னதாக, மீனாட்சி மில். ஜி. எச். சி. எல் அறக்கட்டளை சார்பாக 2 ஆயிரம் தேசியகொடிகள் பேரூராட்சித் தலைவர் கலா மீனா ராஜாவிடம் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி