திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன் ராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வெற்றி அரசு முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைப்பது குறித்து தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் குடிதண்ணீர்,சாக்கடை கால்வாய்,சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது. மீஞ்சூர் பஜார் வீதியில் பேரூராட்சி நிர்வாகம் அனுமதித்ததை விட கூடுதலான இடத்தில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் விபத்து உள்ளிட்டவை நடப்பதாகவும் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அலெக்சாண்டர் உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் இதில் கலந்து கொண்டனர். வார்டு கவுன்சிலர்களுக்கு அரசு சார்பில் ஊதியம் வழங்கியதற்காக வார்டு கவுன்சிலர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு