மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில், காளியம்மன் கோவில் அருகில் 2020 -21 ஆம் ஆண்டு 15 ஆவது நிதி குழு மானியத்தில் பேவர் பிளாக் அமைத்ததில் குளறுபடி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் பொதுவாக ஊராட்சிகளில் நடைபெறும் வேலை முடிந்த பிறகு அதற்கான திட்ட மதிப்பீடு தொகை எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை உள்ளிட்டவைகளின் பெயர் பலகை வைப்பது வழக்கம். அந்த வகையில், மேலக்கால் ஊராட்சியில், காளியம்மன் கோவில் அருகில் பேவர் பிளாக் அமைத்து பெயர் பலகை வைத்ததில் 2020 -21 ஆம் ஆண்டு 15 வது நிதி குழு மானியத்தில் எதிலிருந்து எதுவரை என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை என்றும் , மதிப்பீடு எழுதி இருப்பதில் குளறுபடி இருப்பதாகவும் பொது மக்களுக்கு தெளிவாக தெரியும்படி எழுதப்படவில்லை என்றும், மேலும் முறையாக மழை நீர் வடிகால் அமைப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், அடுத்து வரக்கூடிய மழை காலங்களில் காளியம்மன் கோவில் முன்பு மழை நீர் தேங்கி அருகில் உள்ள வீடுகளுக்குள் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் மேலும், முறையாக கழிவுநீர் கால்வாய் பணிகள் செய்யாததால் மழை காலங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆகையால், அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி முதல் நாடக மேடை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை காலங்களில் கழிவு நீர் குடிநீரில் கழக்காதவாறு பணிகளை செய்ய வேண்டும் என்றும், மேலும் பேவர் பிளாக் அமைத்த பணிகளில் முறையாக பெயர் பலகையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி