மதுரை : சோழவந்தான் நகரியில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் (சி.பி.எஸ்.இ) சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.இதில் இப்பள்ளியின் துண முதல்வர்கள் அபிராமி,டயானா, மற்றும் துணை பொது மேலாளர்பானுப்ரியா, மனிதவள மேலாளர்அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவ மாணவியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், அலுவலக அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை ஆட்சியர் ஜான்பிரிட்டோ கொடியினை ஏற்றி மரியாதை செய்தார். இவ்வளாகம் முழுச்சூழலும் பெருமையினாலும் தேசப்பற்றினாலும் நிறைந்து இருந்தது. மேலும் இவ்விழாவில் அப்பள்ளியின் “மாணவர் ஆட்சி மன்றம்” தொடங்கப்பட்டது. இதில் அப்பள்ளியில் முன்னதாக நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் அர்ஜுன் பள்ளி மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து துணை மாணவர் தலைவியாக பொற்கலை ரிஷிகா பதவி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து துறை சார்ந்த அமைச்சர்கள் பதவி வகித்தனர். டயானா உறுதி மொழியை வாசித்தார். மாணவர்கள் முன் மொழிந்தனர். மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சி நடந்தது. சுதந்திரதின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி