மதுரை : நமது பகுதியில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகள்(குடிநீர், பாதாள சாக்கடை, தார்ச்சாலை) குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கும், மதுரை மாநகராட்சிக்கும், சுவரொட்டிகள் மூலமாகவும், நாளிதழ்கள்( தினத்தந்தி &தினமலர்) மூலமாகவும், புகார் மனுக்கள் மூலமாகவும் நேரிடையாகவும், தபால் மூலமாகவும் கொடுக்கப்பட்டது. அதற்கு பதில் மனுவாக மதுரை மாநகராட்சியிடம் இருந்து கடந்த (11-11-2022) தேதியில் நமது பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர், பாதாள சாக்கடை வேலைகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் நடைபெறவிருப்பதாகவும், மேலும் கடந்த (02 -01-2023) தேதியன்று மற்றொரு பதில் மனுவில் நமது பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றுவருவதாகவும், அப்பணிகள் முடிந்த பின்பு தார்ச்சாலைகள் அமைத்து தரப்படும் என்று குறிப்பிடபட்டு இருந்தது, ஆனால் அது போன்ற எந்தவொரு பணிகளும் இது வரை எங்கள் பகுதிகளில் நடைபெறவில்லை என்று மதுரை மாநகராட்சியிடம் கேட்க பட்டபோது முறையாக பதில்கள் தரப்படவில்லை. நமது பகுதிகள் மதுரை மாநகராட்சியில் இணைந்து 13 வருடங்களாகியும், வீட்டு வரிகளை பல மடங்கு உயர்த்திய நிலையில், நாம் வீட்டு வரிகளை முறையாக செலுத்திய போதிலும் மதுரை மாநகராட்சி அடிப்படை வசதிகளை செய்து தர காலதாமதப்படுத்துவது நியாயமா? (இத்துடன் மதுரை மாநகராட்சியில் இருந்து அனுப்பப்பட்ட பதில் மனுக்களை இணைத்துள்ளோம்)
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
முனியாண்டி