ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜாராமன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராகவும், ஐ.ஏ.எஸ் அதிகாரி குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிகி தாமஸ் வைத்தியன், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனந்தகுமார், தொழில்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா குல்கர்னி,வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக பிரகாஷ், டி.ஆர்.பி தலைவராக ஸ்ரீவெங்கட பிரியா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கலையரசி, தமிழக சிறுதொழில் மேம்பாட்டு கழகத்தில் தலைவராக விக்ரம் கபூர், மதுரை ஊரக மேம்பாட்டு முகமை திட்ட அதிகாரியாக மோனிகா ரானா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றம் வாரிய செயல் இயக்குநராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கலையரசி கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.