திருவள்ளூர் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தபடி தமிழ்நாட்டில் 1 -ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் , மாணவியர்களுக்கு சிறப்பு திட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ள அரசு துவக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் பொன்னேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் துரை சந்திரசேகர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா இராமநாதன் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம். எஸ். கே ரமேஷ் ராஜ் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு. தமிழ் உதயன் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்ஸாண்டர் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார் சந்திரசேகர் தி.மு.க நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆதிதிராவிடர் நல குழு தலைவர் மீ. வி கோதண்டம் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் மீஞ்சூர் முன்னாள் பேரூர் கழக செயலாளர் மோகன்ராஜ் மீஞ்சூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன் மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஜோதிலட்சுமி மோகன், குமாரி புகழேந்தி ,சங்கீதா சேகர், கவிதா சங்கர் , துரைவேல் பாண்டியன் , சுகன்யா வெங்கடேசன், அபூபக்கர் , ரஜினி, ஜெயலக்ஷ்மி தன்ராஜ் ,மோனிகா ராஜேஷ், ஜெயலட்சுமி ஜெய்சங்கர் , பரிமளா அருண் குமார் , மற்றும் ஆசிரியர்கள் அரசு துறை அதிகாரிகள் தி.மு.க நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு