திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் காரியாபட்டி கிராமம் அம்மா பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மாயக்காரி மாசாணி அம்மன் பக்தர்கள் பீடத்தில் பெளர்ணமியை முன்னிட்டு மயானகாளி பூஜை மற்றும் 108 கருப்பசாமிகளுக்கான சிறப்பு பாலபிஷேகம் நிகழ்ச்சியுடன் உலகில் எங்கும் காண கிடைக்காத படுத்த நிலையில் உள்ள மயான கருப்பசாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இக்கோவிலில் மூலவராய் 21 அடி படுத்த நிலையில் மாசாணியம்மன் சிலை அமைய பெற்றுள்ளது. கோவில் பிரகாரத்தில் முன்பக்கம் காவல் தெய்வமாய் காவல்கார கருப்பசாமி, தியான மண்டபம் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க பிரதான காளியம்மன், குழந்தை பாக்கியம் அருள பேச்சியம்மன், பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றை நீக்கி வாழ்க்கை எல்லா செல்வங்களும் பெற மகா சக்தி ராக்காயியம்மன் மற்றும் நோய் நொடியில் இருந்து காக்க சென்ற வருடங்களில் கொரோனா என்ற நோயிலிருந்து உலகத்தை காக்க உலகத்தில் எங்கும் இல்லாத கொரோனா மாரியம்மன்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா