திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் காட்டூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் பொன்னேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 78 மிதிவண்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து பள்ளியில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை சான்றிதழ் வழங்கினார்.
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மொழிப்போர் தியாகி டாக்டர் கா.சு. ஜெகதீசன் ஊராட்சி மன்ற தலைவர் K.C. செல்வராமன் தலைமை ஆசிரியர் மரகதம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் நந்தினி நீலவண்ணன், துணை தலைவர் ரேவதி சண்முகசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனுசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகல்யா, தி.மு.க நிர்வாகிகள் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய துணை ஸ்டாலின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் காட்டூர் ராஜேஷ், திருவெள்ளைவாயல் ஹரி, மெரட்டூர் நேதாஜி, குணா மாஸ்டர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீஞ்சூர் கிழக்கு வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், வல்லூர் நந்தா, மீஞ்சூர் குரு சாலமன் காட்டூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ரஜினிகாந்தன் ஜெயக்குமார் ஆகியோர் நன்றி தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு