திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், கலந்து கொண்டு பல்கலைக்கழகத்திலும், கல்லூரியில் பயிலும் மாணவியர்களுக்கு முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார். மேலும் இவ்விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பயிலும் 15.715 மாணாக்கர்களில் 765 மாணவியர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர். பொன்முடி பட்டமளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இவ்விழாவில் கலந்து கொள்ள ஆகஸ்டு 30. ஆம் தேதி முதல் கொடைக்கானல் மலைச்சாலை முழுவதும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு ஆளுநர் கொடைக்கானலுக்கு வருகை புரிவதை தொடர்ந்து விழா முடிவு வரை மலைச்சாலைகள் மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் பலத்த காவல் துறை பாதுகாப்பானது போடப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா