இராமநாதபுரம் : இராமேஸ்வரம் நகர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைக்கினங்க, சுற்றுலா துறை அமைச்சர் மாண்புமிகு இராமச்சந்திரன் அவர்கள் இராமேஸ்வரம் வருகை தந்தார்கள். மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் வரவேற்று, இராமேஸ்வரம் நகரில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் எடுத்து கூறினார்கள். அதனை தொடர்ந்து, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனுஷ்கோடி மீண்டும் புனரமைப்பு செய்வதற்கு ரூ. 5கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். மேலும் ஓட்டல் தமிழ்நாடு முதல் சங்குமால் வரை பழுதடைந்த கடற்கரை நடைபாதை சீரமைப்பு செய்ய ரூ. 2கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்கள். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆய்வு பணிகள் சிறப்பாக இருந்தது. விரைவில் பணிகள் தொடங்கும்.