திருவள்ளூர் : அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தெலங்கானா அரசின் உயரதிகாரிகளும் தங்களது மாநிலத்தில் செயல்படுத்துவது தொடர்பாக இந்த திட்டம் குறித்து இன்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு உணவு தயாரிக்கப்படும் முறை, மாணவர்களுக்கு உணவு பரிமாறுதல் ஆகியவற்றை கேட்டறிந்தனர். பல்வேறு தரப்பினரிடம் வரவேற்ப்பை பெற்றுள்ள இந்த திட்டம் தொடர்பாக (தினமலர்) காலை நாளிதழ் கீழ்த்தரமான வகையில் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்த்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தி.மு.கவினர் கீழ்த்தரமாக செய்தி வெளியிட்ட நாளிதழை கிழித்து, எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நாளிதழ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது முழக்கங்களை எழுப்பினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு