மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அழகி நாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மங்கல இசை முழங்க கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மூன்று கால பூஜையுடன் யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், 10ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி, துணை சேர்மன் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர் ரகுபதி, அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இன்று மாலையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை நிர்வாக குழுத்தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் பொருசுப்பட்டி திருக்கோவில்ங்காளிகள் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி