திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் சிற்பி தீனதயாளன் சிற்பக்கூடம் அமைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலை என பல்வேறு சிலைகள் இந்த சிற்பக்கூடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது முன்னாள் பிரதமர் வி.பி.சிங், முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா ஆகியோரது சிலைகள் இந்த சிற்பக் கூடத்தில் தயாராகி வருகின்றன. இந்த சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக களிமண் மாதிரியால் செய்யப்பட்டுள்ள இந்த சிலைகளின் மாதிரிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சிலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து சிற்பிக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து பிலாஸ்டர் ஆப் பாரீஸ் இறுதியாக வெண்கலத்தில் சிலைகள் தயாராக உள்ளன. வி.பி.சிங் முழுஉருவ 9அடி வெண்கல சிலை மாநில கல்லூரியிலும், 3.5 அடி உயர வெண்கல கலைஞர், அண்ணா சிலைகள் நினைவிடங்களில் அமைய உள்ளது. குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ .டி.ஜெ.கோவிந்தராசன் ஒன்றிய செயலாளர்கள் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் கா.சு. ஜெகதீசன் மீஞ்சூர் பேரும் கழக செயலாளர் க.சு.தமிழ்உதயன் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் மீஞ்சூர் பேரூராட்சி நான்காவது வார்டு கவுன்சிலர் ரஜினி நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி மீ. வி கோதண்டன் கோளூர் கதிரவன் பழவேற்காடு அலவி முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் பா.து. தமிழரசன், ஆ. ஜோசப், என்ற சீனிவாசன், திருப்பதி மில்லர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு