மதுரை : சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியாவின் உருவ பொம்மையை தி.மு.கவினர் தீ வைத்து எரித்து கண்டனம் கோசங்கள் எழுப்பினர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பண்ணைசெல்வம் தலைமையில், தி.மு.கவினர் வட இந்திய சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியார் உருவ பொம்மையை எரித்து அவருக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். சமீபத்தில் வட இந்திய சாமியாரான பிரம்ஹன்ஸ் ஆச்சாரியார் என்பவர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தவறாக பேசியும், அவரது தலையை வெட்டுவதற்கு 10 கோடி ரூபாய் பரிசளிப்பதாகவும் பேசியிருந்தார். அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்து நூலகத்திலிருந்து அவரது உருவ பொம்மையை சுமந்து ஊர்வலமாகச் சென்று தீ வைத்தனர். அவருக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் , தி.மு.க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி