திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், ஆன்லைன் பொருட்களை முற்றிலுமாக புறக்கனித்துவிட்டு உள்ளூர் வியாபாரிகளிடம் வணிகம் செய்ய மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு பிரச்சார இயக்கம் துவக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீஞ்சூரில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் மளிகை கடைகள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டவைகள் உள்ளன. தற்போதுஆன்லைன் ஆப் மூலம் உடான் ரிலையன்ஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்கள் மளிகை பொருட்களை மொத்த விலையில் கடைகளுக்கு நேரடியாக விறப்னை செய்யும் நிலையில் இதனால் உள்ளூர் மொத்த வியாபாரிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. உள்ளூர் வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கீழ் இயங்கும் மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பில் தொடர் முயற்சிகள் காரணமாக மீஞ்சூரில் ஆன்லைன் ஆப்கள் தடைசெய்ய பட்டன.
இதற்கு நன்றி தெரிவிக்கும் பொறுட்டும் ஆன்லைன் வர்த்கத்தை தடை செய்யும் வகையில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று பேரமைப்பு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. பேரமைப்பு தலைவர் ராஜேந்திரன் தலைமை வகிக்க செயலாளர் முகமதுஅலி, தலைவர் சுரேஷ், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.மேலும் மீஞ்சூர் பொன்னேரி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சண்முகம், கோபிநாத், ஹாஜா சரிப், முரளிதரன் ,உள்ளிட்டவர்கள் ஆன்லைன் ஆப் தடை செய்தமைக்கு நேரில் சந்தித்து நன்றிகள் கூறி ஆன்லைன் வணிகத்திற்கு எதிராக இணைந்து செயல்படவும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்குவது என முடிவு செய்யப்படது. இதில் நிர்வாகிள் அலெக்சாண்டர், எழிலரசன், ராஜன், அப்துல் அஜிஸ், ரமேஷ் ஒருங்கினைப்பாளர் அபுபக்கர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு